மல்லித்தழை சூப்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மல்லித்தழை - 50 கிராம்
2. பூண்டு - 10 எண்ணம்
3. மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
4. எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. மல்லித்தழை,உரித்த பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் மல்லித்தழை, பூண்டு விழுது,மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
3. நன்றாகக் கொதித்து வந்தபின்பு இறக்கவும்.
4. பரிமாறும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.