முடக்கத்தான் கீரை சூப்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முடக்கத்தான் இலை - 1 கட்டு
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. கேரட் - 1 எண்ணம்
5. பீன்ஸ் - 5 எண்ணம்
6. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
7. இஞ்சிப் பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
8. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
9. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
10. சோள மாவு - 2 தேக்கரண்டி
11. மல்லித்தழை - சிறிது
12. புதினா இலை - சிறிது
13. கறிவேப்பிலை - சிறிது
14. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், மல்லித்தழை, புதினாஇலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. முடக்கத்தான் இலையை நறுக்கித் தண்ணீரில் அலசி வைக்கவும்.
3. சுத்தம் செய்த முடக்கத்தான் இலையில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
4. வேகவைத்த முடக்கத்தான் இலையுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா இலை சேர்த்து வேக விடவும்.
5. அதனுடன் இஞ்சிப்பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு மசிக்கவும்.
6. கடைசியாக சோள மாவு சேர்த்துக் கலந்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.