சுண்டைக்காய் சூப்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சுண்டைக்காய் – 50 கிராம்
2. வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் – 1 கப்
3. தக்காளி - 1 எண்ணம்
4. வெங்காயம் – 1 எண்ணம்
5. எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி
6. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
7. எண்ணெய் – தேவையான அளவு
8. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
9. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
10. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி, அதன் பிறகு அதை நசுக்கி வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளிம் பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. பின்னர் அதனுடன் நசுக்கி வைத்திருக்கும் சுண்டைக்காயைப் போட்டு, அது மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.
5. அதனுடன் உப்பு, பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
6. கொதிக்க வைத்த சூப்புடன் மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.