தக்காளி குடைமிளகாய் சூப்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. தக்காளி - 7 எண்ணம்
2. குடைமிளகாய் - 1 எண்ணம்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. இஞ்சி - சிறிய துண்டு
5. மிளகுத்தூள் – தேவையான அளவு
6. உப்புத்தூள் - தேவையான அளவு
7. எண்ணெய் - சிறிது
8. காய்கறி வேகவைத்த தண்ணீர் - 1 கப்.
செய்முறை:
1. முதலில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை பெரியதுண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அனைத்துப் பொருட்களையும் அதில் போட்டு இலேசாக வதக்கிப் பின்பு தண்ணீர் சேர்த்து வேகவிட வேண்டும்.
3. அனைத்தும் வெந்த பின்பு அதை அகலமான ஒரு தட்டில் பரப்பி, அது நன்கு ஆறியதும் அதை விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
4. பின் அதை வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
5. அத்துடன் உப்பு, வேகவைத்த காய்கறி தண்ணீர் சேர்த்து குறைந்த நெருப்பில் சிறிது சூடாக்க வேண்டும்.
6. கடைசியாக அதன் மேல் மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.