கொள்ளு சூப்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கொள்ளு - 1/2 கப்
2. தக்காளி - 3 எண்ணம்
3. எலுமிச்சம்பழச் சாறு - 1/2 மேசைக்கரண்டி
4. மல்லித்தழை - சிறிது
5. உப்பு - தேவையான அளவு
6. எண்ணெய் - தேவையான அளவு
பொடிக்க:
7. மிளகு - 1 தேக்கரண்டி
8. சீரகம் - 1 தேக்கரண்டி
9. பூண்டு - 2 பல்
10. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. முதல் நாள் இரவே கொள்ளுவை ஊற வைத்து விடவும்.
2. ஊற வைத்த கொள்ளை மறுநாள் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
3. வேகவைத்த கொள்ளிலிலிருக்கும் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
4. மிளகு, சீரகத்தை நன்கு மைய அரைத்துப் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்துத் தட்டியெடுங்கள்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து, அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
6. பின்னர் அதில் அரைத்த விழுது சேர்த்து மேலும் சில நிமிடம் வதக்கவும்.
7. கொள்ளு வேகவைத்த தண்ணீரையும், தேவையான உப்பையும் சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும்.
8. அதில் எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை, மிளகு தூள் சேர்த்து பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.