முட்டைக்கோஸ் சூப்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முட்டைக்கோஸ் - 200 கிராம்
2. கேரட் - 50 கிராம்
3. வெங்காயம் - 2 எண்ணம்
4. சோள மாவு - 1/2 தேக்கரண்டி
5. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. வெண்ணெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை:
1. முட்டைக்கோஸ், கேரட், வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கழுவித் தனித்தனியாக வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளான முட்டைக்கோஸ், கேரட் மற்றும் வெங்காயம் சேர்த்து வேகவைக்கவும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், அதில் காய்கறி வேக வைத்த தண்ணீர், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
4. பின் சோள மாவைக் கட்டி சேராதவாறு தூவி நன்கு கிளறி, கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.