பூண்டு சூப்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பூண்டுப் பற்கள் - 6 எண்ணம்
2. அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
3. வெங்காயம் (நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
4. இஞ்சி - 1 துண்டு
5. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
6. மல்லித்தழை - சிறிது
7. புதினா - சிறிது
8. எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
9. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு நீளமான கம்பியில் தோக் நீக்காத பூண்டுப் பற்களை வரிசையாகக் குத்தி அடுப்புத் தீயில் காட்டிச் சுட்டெடுக்கவும்.
2. சுட்ட பூண்டு பற்கள் ஆறியவுடன், அதன் தோலை நீக்கித் தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சி, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றை வைத்து ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும், அதில் வெங்காயத்தைப் போட்டுச் சிறிது நேரம் வதக்கவும்.
6. சுட்ட பூண்டுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்துக் கட்டி வைத்துள்ள துணி முடிச்சை அதன் நடுவில் வைத்து, மூடி போட்டு பத்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
7. பின்னர், துணி மூட்டையை வெளியே எடுத்து, சூப்பிலேயே பிழிந்து விடவும். அரிசி மாவைச் சிறிது தண்ணீரில் கரைத்துச் சூப்பில் ஊற்றிக் கொதிக்க விடவும்.
8. தேவையான அளவிற்கு சூப் கெட்டியானதும், இறக்கி வைத்து எலுமிச்சைச் சாற்றை சேர்க்கவும்.
9. உப்பு, மிளகுத்தூள், சிறிது புதினா இலை ஆகியவற்றைத் தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.