காலிப்பிளவர் சூப்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காலிப்பிளவர் – 1 எண்ணம்
2. பாசிப்பருப்பு – 200 கிராம்
3. வெங்காயம் – 250 கிராம்
4. தக்காளி – 250 கிராம்
5. பச்சை மிளகாய் – 10 எண்ணம்
6. சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
7. சோம்புத்தூள் – 1/2 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
9. சீரகம் – 1/2 தேக்கரண்டி
10. மிளகாய் வற்றல் – 5 எண்ணம்
11. பட்டை - சிறிது
12. பிரியாணி இலை - சிறிது
13. மிளகு – சிறிது
14. எண்ணெய் – தேவையான அளவு
15. கறிவேப்பிலை - சிறிது
16. மல்லித்தழை - சிறிது
17. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பைப் போட்டு ஒரு லிட்டர் அளவில் தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், சீரகம், சிறிது எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
2. பருப்பு ஒரு கொதி வந்ததும், சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு நன்கு வேக விடவும்.
3. பருப்புடன் வெங்காயம், தக்காளி சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் காலிப்பிளவரைச் சேர்த்து நன்கு வேக விடவும்.
4. காலிப்பிளவர் வெந்ததும் தேவையான உப்பு, சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
5. வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிப் பட்டை, பிரியாணி இலை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்துச் சூப்பில் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
6. இறக்கி வைத்த சூப்பில் மல்லித்தழை தூவி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.