வாழைத் தண்டு சூப்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. வாழைத் தண்டு - ஒரு துண்டு
2. மல்லித்தழை - 1/2 கட்டு
3. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
4. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வாழைத் தண்டு மற்றும் மல்லித்தழையை முதலில் நறுக்கிச் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
2. அரைத்த கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை வடிகட்டவும்.
3. வடிகட்டியதை 10 நிமிடம் மிதமான நெருப்பில் கொதிக்க வைக்கவும்.
4. கொதித்தவுடன் அதனுடன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் கலந்து இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.