கோழி சூப்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் - 250 கிராம்
2. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
5. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
6. பொடித்த மிளகு - 1 தேக்கரண்டி
7. சீரகம் - 1/2 தேக்கரண்டி
8. சோம்பு - 1/4 தேக்கரண்டி
9. மல்லி - 1/2 தேக்கரண்டி
10. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
11. பூண்டு - 7 பற்கள்
12. மல்லித்தழை - சிறிது
13. கறிவேப்பிலை - சிறிது
14. எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வாணலியில் பொடித்த மிளகு, சீரகம், சோம்பு, மல்லி (தனியா) மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து, ஆறவைத்துப் பின்னர் அரைக்கவும்.
2. வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. பூண்டு பற்களைத் தட்டி வைக்கவும்.
4. மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சிக்கனை லேசாக வதக்கவும்.
5. அத்துடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தட்டிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
6. நான்கு பேருக்கு ரசம் தயார் செய்யத் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிக்கனை வேகவைக்கவும்.
7. வெந்த சிக்கனை மட்டும் எடுத்து நான்கு பவுல்களில் சமமாகப் பிரித்து வைக்கவும். சிக்கன் வெந்த தண்ணீரை சிறிது நேரம் அதே வாணலியில் கொதிக்கவிடவும்.
8. அதோடு அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
9. இந்த ரசத்தை, ஒவ்வொரு சிக்கன் பவுலிலும் சமமாக ஊற்றி, மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.