வாழைத்தண்டு சூப்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. வாழைத்தண்டு -1 கப்
2. மல்லி - 3 தேக்கரண்டி
3. சீரகம் -3 தேக்கரண்டி
4. மிளகு - 3 தேக்கரண்டி
5. வெங்காயம் - 2 எண்ணம்
6. தக்காளி - 1 எண்ணம்
7. இஞ்சி - சிறிது
8. பூண்டு - 2 பல்
9. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
11. மல்லித்தழை - சிறிது
12. கறிவேப்பிலை - சிறிது
13. எண்ணெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வாழைத்தண்டைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் வாழைத்தண்டைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
3. ஒரு வாணலியில் மல்லி, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
4. வறுத்த கலவையை சிறிது ஆறவைத்து, பின்பு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
5. அதே வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் அரைத்த கலவையைச் சேர்த்து நன்றாகப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6. பிறகு கொதிக்க வைத்த வாழைத்தண்டு, மஞ்சள்தூள், தேவையான அளவு சேர்த்து ஒரு 10 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்.
7. தேவையான அளவு கொதித்த பின்பு, அதில் மல்லித்தழை தூவிச் சுடச்சுடப் பரிமாறலாம்.
குறிப்பு: காரச் சுவை தேவைக்கு மிளகுத் தூளைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.