குஜராத்தி எள் பூரி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மைதா -1 கப்
2. கோதுமை மாவு - கால் கப்
3. நெய் - 2 மேஜைக் கரண்டி
4. கரகரப்பாக பொடித்த மிளகு - அரை ஸ்பூன்
5. மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
6. வறுத்த எள் -1 ஸ்பூன்
7. கொத்தமல்மல்லி இலை- மிகப் பொடியாக நறுக்கியது சிறிது
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.மைதா, கோதுமை மாவு ஆகியவற்றை நெய் ஊற்றி சிறிது தண்ணீர் கலந்து பிசையவும்.
2. உப்பு, மிளகாய்த்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை ஆகியவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து சுமார் அரை மணி நேரம் வைத்திருக்கவும்.
3. பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி சிறிய வட்டவடிவில் தேய்த்துக் கொள்ளவும்.
4. இதில் எள்ளை இலேசாகத் தூவி நான்காக மடிக்கவும்.
5. வாணலியில் எண்ணெயைச் சுட வைத்து அதில் போட்டு பொறித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.