முட்டையில்லாத கேக்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு - 400 கிராம்
2. வெண்ணெய் - 200 கிராம்
3. பால் - 2 கப்
4. பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
5. சோடா உப்பு - 1தேக்கரண்டி
6. சர்க்கரை - 150 கிராம்
7. ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
8. கிராம்புத் தூள் - 1/2 தேக்கரண்டி
9. உலர்ந்த திராட்சை - 50 கிராம்
10. தேன் - 50 கிராம்
செய்முறை:
1. முட்டையில்லாத கேக் செய்வதற்கு மைதா மாவில் பேக்கிங் பவுடர்சோடா உப்பு, ஏலக்காய்த் தூள், கிராம்புத் தூள் ஆகியவற்றைக் கலந்து மூன்று முறை சலித்துக் கொள்ளவும்.
2. சலித்து வைத்துள்ள மாவுடன் வெண்ணெயைச் சேர்த்துப் பொடிப்பொடியாக உதிர்த்து, அதில் உலர்ந்த திராட்சையை போட்டு புரட்டி எடுத்துக் கொள்ளவும்.
3. பாலுடன் சர்க்கரை மற்றும் தேனைக் கலந்து நன்குக் கரைத்துக் கொள்ளவும்.
4. பின்னர் இக்கரைசலுடன், மாவில் புரட்டி வைத்துள்ள உலர்ந்த திராட்சைகளைச் சேர்த்துக் கலக்கவும்.
5. பிறகு இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் வைத்து பேக் செய்து கேக்காக எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.