பிஸ்தா பர்பி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பிஸ்தா பருப்பு (உப்பில்லாதது) - 1 டம்ளர்
2. சர்க்கரை - 2 1/2 டம்ளர்
3. நெய் - 1/4 டம்ளர்
4. ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும்.
2. பின்னர் அதனை ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
3. சர்க்கரையுடன் முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
4. பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
5. ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து, நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தட்டிற்கு மாற்றி ஆற விட்டு வில்லைகள் போடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.