கார்ன்பிளவர் அல்வா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கார்ன்பிளவர் மாவு - 1/2 கப்
2. சர்க்கரை - 1 1/2 கப்
3. கிஸ்மிஸ் - 25 கிராம்
4. முந்திரிப்பருப்பு - 25 கிராம்
5. டூட்டிபுரூட் - 25 கிராம்
6. ஏலக்காய் - 2 எண்ணம்
7. நெய் - 1/4 கப்
செய்முறை:
1. சோள மாவை 1 1/2 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்.
2. ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, பிசுக்கு பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
3. அதில் கரைத்த மாவை ஊற்றிக் கை விடாமல் கிளறவும்.
4. மாவு வெந்து, சிறிது கட்டியாகுவது போலத் தெரியும், ஆனால் பின்பு ஒரே சீராக வெந்து, பளபளப்பாகும்.
5. இந்த நிலையில், கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு, டூட்டிபுரூட் சேர்த்துக் கிளறவும்.
6. அதனுடன் ஒரு தேக்கரண்டி நெய்யைச் சேர்த்துக் கிளறவும். 1/4 கப் நெய்யையும் இதைப் போலவே சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
7. அடியில் சிறிது வெள்ளை பூத்தாற்போல் வரும் பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவிடவும்.
8. ஆறிய பின், அதனைத் துண்டுகளாகப் போட்டுப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.