கேரட் கேசரி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ரவை - 1/2 கப்
2. கேரட் விழுது - 1 கப்
3. சர்க்கரை - 3/4 கப்
4. முந்திரிப்பருப்பு – 10 எண்ணம்
5. ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
6. நெய் - 1/4 கப்
செய்முறை:
1. வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, முந்திரியைச் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அதே நெய்யில் ரவையைச் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
2. அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து ரவை, கேரட் விழுது சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் வேகும் வரை கிளறவும்.
3. அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கிளறவும்.
4. பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.