சென்னை சுசியம்
பாரதி
தேவையான பொருட்கள்:
1. இட்லி மாவு - 1 கப்
2. கடலைப்பருப்பு - 200 கிராம்
3. வெல்லம் - 200 கிராம்
4. ஏலக்காய் - 4 எண்ணம்
5. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. கடலைப்பருப்பை நன்றாக நீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவேண்டும்.
2. வெல்லத்தைப் பொடி செய்து வேகவைத்த கடலைப்பருப்புடன் சேர்த்துக் கிளறவும்.
3. சூடு ஆறியதும் மிக்சியில் ஆட்டிச் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும்.
5. உருட்டி வைத்த உருண்டைகளை இட்லி மாவில் மூழ்க வைத்து, அதனை அப்படியே எடுத்து காய்ந்த எண்ணெய்யில் போட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.