பாதுஷா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மைதா - 1 கப்
2. சர்க்கரை - 1 1/4 கப்
3. நெய் - 2 மேசைக்கரண்டி
4. தயிர் - 3 மேசைக்கரண்டி
5. பேக்கிங் சோடா - 1/4 மேசைக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் நெய்யை எடுத்து, அதனுடன் தயிர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
2. பின்னர் அதில் மைதா மாவைச் சேர்த்து நன்றாகக் கலந்து, கைகளில் ஒட்டாதபடி மிதமான பதத்திற்கு மாவைப் பிசைந்து வைக்கவும்.
3. அதன் பிறகு, அந்த மாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டி, நடுவில் லேசாக அழுத்தி விடவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.
5. பொரித்து எடுத்தவற்றை ஆற வைக்கவும்.
6. அடுப்பில் கடாயை வைத்துச் சர்க்கரையைப் போட்டு, அதில் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரையும் வரை இரண்டு நிமிடங்கள் சூடுபடுத்தவும்.
7. பிறகு ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
8. பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்துச் சர்க்கரை பாகுவில் ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
9. ஊற வைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும்.
10. சர்க்கரை பாகு நன்றாக உறைந்ததும் பாதுஷாவை பறிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.