உருளைக்கிழங்கு காராசேவு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு – 2 எண்ணம்
2. கடலை மாவு – 1 கப்
3. அரிசி மாவு – 1/4 கப்
4. நெய் – 1 1/2 மேசைக்கரண்டி
5. மிளகாய் வற்றல் – 6 எண்ணம்
6. பெருங்காயம் – சிறிதளவு
7. எண்ணெய் – தேவையான அளவு
8. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துக் கட்டிகளில்லாமல் நன்கு மசித்துக் கொள்ளவும்.
2. காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. அரிசி மாவில் நெய் சேர்த்து, கடலை மாவு, அரைத்த மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசையவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் காராசேவு கரண்டியில் மாவைப் போட்டு நன்றாகத் தேய்த்துப் பொரிந்தவுடன் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.