நெல்லிக்காய் மிட்டாய்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நெல்லிக்காய் - 1/2 கிலோ
2. சர்க்கரை - 1 1/2 கப்
3. கருப்பு உப்பு - 1/2 தேக்கரண்டி
4. உப்பு - 1/4 தேக்கரண்டி
5. மிளகு - 1 தேக்கரண்டி.
செய்முறை:
1. நெல்லிக்காயை தண்ணீரில் நன்கு கழுவி, சுத்தமான துணியால் துடைத்து வைக்கவும்.
2. ஒரு சுத்தமான பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் (ப்ரீசரில்) இரண்டு நாட்களுக்கு வைக்கவும்.
3. மூன்றாவது நாள் காலையில் குளிர் சாதன பெட்டியிலிருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
4. நெல்லிக்காய் விதைகளை நீக்கி விட்டு நீளவாக்கில் துண்டுகளாக்கவும்.
5. மிக்ஸியில் கருப்பு உப்பு, மிளகு மற்றும் சர்க்கரையைப் போட்டு பொடிக்கவும்.
6. பொடித்த சர்க்கரைக் கலவையை வெட்டி வைத்துள்ள நெல்லிக்காயின் மேல் கொட்டி, நீண்ட தேக்கரண்டியால் கலக்கி விடவும்.
7. நெல்லிக்காயில் உள்ள தண்ணீரை இழுத்துக் கொண்டு சர்க்கரை கரையத் தொடங்கும்.
8. நெல்லிக்காய் சர்க்கரை தண்ணீரில் ஊற விட்டது போல ஆகி விடும்.
9. மூன்றாம் நாள் காலை வெய்யிலில் காய வைக்கவும். இளகிய தண்ணீர் மிக நீர்க்கவும் அதிகமாகவும் இருந்தால் பாதியை ஒரு கிண்ணத்தில் வடித்து எடுத்து விடவும்.
10. இளகிய தண்ணீர் சிறிதளவாயின் அப்படியே வெய்யிலில் காய விடவும்.
11. அவ்வப்போது தேக்கரண்டியால் கிளறி விடவும்.
12. வெய்யிலின் சூட்டில் நாம் அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு காய்ச்சுவது போல முதலில் பிசுபிசுப்பாக இருக்கும். பின்னர் காய காய கம்பி பதம் வரும். அதன் பிறகு, சர்க்கரை தண்ணீர் கெட்டிப்பட்டு நெல்லிக்காயின் மேல் ஒரு படலமாக படிந்து விடும்.
13. நன்கு காயும் வரை தினமும் வெய்யிலில் வைத்துக் காய வைக்கவும்.
14. நன்கு காய்ந்ததும் சுத்தமான ஈரம் இல்லாத பாட்டிலில் எடுத்து வைத்துப் பத்திரப்படுத்தவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.