தேங்காய் அல்வா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. தேங்காய்ப்பால் - 2 கப்
2. அரிசி - 4 தேக்கரண்டி
3. சர்க்கரை - 1/4 கப்
4. உப்பு - 1 சிட்டிகை
5. சிவப்பு நிறப்பொடி (உணவுக்குரியது) - 2 சிட்டிகை.
செய்முறை:
1. அரிசியை ஊற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும்.
2. அதனுடன் கெட்டியான தேங்காய்ப்பால், சர்க்கரை, சிவப்பு நிறப்பொடி சேர்த்து நன்கு கலந்து, அடிகனமான கடாயில் சேர்த்துக் கைவிடாமல் கரண்டியால் கிளறவும்.
3. கலவை இறுகி, கடாயில் ஒட்டாமல் வரும்போது, தட் டில் கொட்டி வில்லைகள் போடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.