தேங்காய்ப் பால் கேக்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. தேங்காய்த் துருவல் - 2 கப்
2. சர்க்கரை - 11/2 கப்
3. பால் - 1 கப்
4. நெய் - 2 மேசைக்கரண்டி
5. முந்திரி (துருவியது) - 1 மேசைக்கரண்டி
6. பாதாம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
7. ஏலக்காய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. தேங்காயைக் கருப்பு தோல் இல்லாமல் துருவி எடுத்து, மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி எடுத்து வைக்கவும்.
2. ஒரு வாணலிய அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காய் துருவல் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிப் பிறகு பால் சேர்த்து நன்கு கலந்து கிளறி கொதிக்க விடவும்.
3. தேங்காய்ப் பால் நன்கு கொதித்து பால் வத்தி சேர்ந்து வரும் பொழுது சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
4. கிளறும் பொழுது கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் நன்கு கலந்து, ஒட்டாமல் வரும் பொழுது ஏலக்காய்த்தூள் சேர்த்து நெய் தடவிய தட்டில் முந்திரி தூவி பிறகு தேங்காய் கலவையைக் கொட்டி நன்கு சமமாக பரப்பி விடவும்.
5. அதன் மேல் துருவிய பாதாம், முந்திரி தூவி, அதனை அப்படியே அழுத்தி விடவும்.
6. பத்து நிமிடம் கழித்து, தேவையான அளவில் (வடிவில்) துண்டு போடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.