தேங்காய் கேக்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. தேங்காய் (பெரியது மற்றும் முற்றியது) - 2 எண்ணம்
2. ரவை - 1/2 கிலோ
3. சீனி - 1 கிலோ
4. ஏலக்காய் - 5 எண்ணம்
செய்முறை:
1. தேங்காயை நன்றாகத் துருவிக் கொள்ளவும்.
2. ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
3. துருவிய தேங்காயை நன்றாக வதக்கவும்.
4. வதக்கிய தேங்காய்த் துருவல், வறுத்த ரவை என்று இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் இடித்துக் கொள்ளவும்.
5. ஏலக்காயைப் பொடியாக்கிக் கலவையில் கலக்கவும்.
6. சீனியை அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகப் பாகு காய்ச்சவும்.
7. பாகு பதமாக வந்தவுடன் கலவையைத் தூவி நன்றாகக் கிளறவும்.
8. பின்னர் அகலமான தட்டில் பரப்பி கேக் துண்டுகளாக வெட்டவும். (தட்டில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம்)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.