தேங்காய் லட்டு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. நெய் – 1 மேசைக்கரண்டி
2. துருவிய வறுத்த தேங்காய் – 200 கிராம்
3. மில்க்மேட் – 200 மி.லி
4. பால் – 100 மி.லி
செய்முறை:
1. ஒரு அகலமான பாத்திரம் அல்லது பேனில் நெய் ஊற்றி அது சூடாகும் போது, துருவி வறுத்த தேங்காயைச் சேர்த்து குறைந்த சூட்டில் வறுக்கவும்.
2. இளஞ்சிவப்பு நிறத்திற்கு வந்ததும், அதில் சிறிது மில்க்மெய்ட் சேர்க்கவும். இது நன்கு கலந்ததும், சிறிது பால் சேர்க்கவும்.
3. நன்கு கிளறிய கலவை கெட்டியாகும் போது அடுப்பை அணைக்கவும்.
4. இதை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நேரம் ஆற வைக்கவும். சிறிய உருண்டைகளாக, லட்டாக உருவாக்கவும்.
5. தயாரிக்கப்பட்ட லட்டுகளை எடுத்து வைத்திருக்கும் 100 கிராம் துருவி வறுத்த தேங்காயில் தனித்தனியாகப் பிரட்டி எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.