மைசூர் பாகு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கடலைமாவு - 1 கப்
2. சீனி - 2 1/2 கப்
3. நெய் - 2 கப்
4. பால் – 1/2 கப்
செய்முறை:
1. கனமான உருளியில் கடலைமாவைப் பச்சை வாசனை போகுமளவிற்குக் குறைந்த தீயில் வதக்கவும் (அதிகம் வதக்க வேண்டாம்)
2. மாவுடன், மிதமாகச் சூடாக்கிய பால், சர்க்கரையைக் கலந்து வதக்கவும். (குறைந்த தீயில் இருக்குமாறு பார்க்கவும்)
3. இருபது நிமிடங்களில் ஓரங்கள் பூத்து வரும், அப்போது நெய்யை இலேசாகச் சூடாக்கிக் கொட்டிக் கிளறி விடவும்.
4. கெட்டியாகும் பதத்தில் பூத்து வரும் வேளையில் நெய் தடவிய தட்டில் கொட்டி, பரத்தி கரண்டியால் சமமாக்கவும்.
5. சிறிது ஆறின பிறகு வில்லைகளாக்கவும்.
6. உடனே எடுக்க முயற்சிக்க வேண்டாம், ஆறிய பிறகு பிரித்த வில்லைகளை எடுக்க அழகாக வரும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.