அன்னாசிப்பழக் கேசரி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளை ரவை -1 கப்
2. அன்னாசிப் பழம் (நறுக்கியது) -1 கப்
3. சீனி - 1 1/4 கப்
4. ஏலக்காய் பொடி -1/4 தேக்கரண்டி
5. நெய் - 3 மேசைக்கரண்டி
6. மஞ்சள் நிறப் பொடி - 1 சிட்டிகை
7. முந்திரிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
8. திராட்சை - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2. அதே நெய்யில் நறுக்கிய அன்னாசிப் பழத்தை மூன்று நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
3. பின்னர் இன்னும் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து ரவையை 5 நிமிடம் வரை கருகிவிடாமல் மிதமான தீயில் கவனமாக சற்று நிறம் மாறும் வரை வறுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும், கொதித்ததும் வண்ணப்பொடி, ஒரு மேசைக்கரண்டி நெய் மற்றும் வறுத்த துண்டுகளாக நறுக்கி வைத்த அன்னாசிப் பழத்தைச் சேர்க்கவும்.
5. பின்னர் வறுத்த ரவையை சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.
6. ரவை வெந்ததும் தீயைக் குறைத்து, அளந்து வைத்துள்ள சீனியைச் சேர்த்துக் கெட்டியாகி விடாமல் கிளறி விடவும்.
7. நன்கு ஒன்று சேர்ந்து வந்ததும் மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும்.
8. வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.