மைசூர் பாகு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 1 கப்
2. நெய் - 2 கப்
3. சர்க்கரை - 2 கப்
4. ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு ஆழமான பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு, சர்க்கரையைப் போடவும்.
2. அது கொதித்து ஒரு இழை பாகாக வரும் போது (கொதித்துக் கொண்டு இருக்கும் பாகை ஆள் காட்டி விரலால் தொட்டுக்கொண்டு அதை கட்டை விரலால் தொட்டால் நடுவில் ஒரு நூல் போல வரும் அதுவே கம்பிப் பதம்) அளந்து வைத்திருக்கும் கடலை மாவை ஒவ்வொரு தேக்கரண்டியாக பாகில் தூவிக் கிளற வேண்டும்.
3. மாவு, ஒரு தேக்கரண்டி நெய் என்று சேர்த்துக் கொண்டேக் கிற வேண்டும். இப்படி, மொத்த மாவு, நெய் முடியும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். (மொத்தமாக, மாவைச் சேர்த்தால் மாவு கட்டி பிடித்துவிடும்)
4. ஒரு கட்டத்தில் பாத்திரத்தில் இருக்கும் மைசூர் பாகில் நெய் பிரிந்து வர ஆரம்பிக்கும். மேலும் நிறைய ஓட்டைகள் இருப்பது போலத் தோன்ற ஆரம்பிக்கும்.
5. இப்போது நெருப்பைக் குறைத்து, ஒரு தட்டில் நெய் கொஞ்சம் தடவி, மைசூர் பாகை அதில் கொட்டவும்.
6. பத்து நிமிடம் கழித்து, ஆறியதும் அதனை நீள் சதுரத் துண்டுகளாகப் போடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.