சோயா பக்கோடா
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சோயா பீன்ஸ் - 100 கிராம்
2. வெங்காயம் - 2 எண்ணம்
3. உருளைக்கிழங்கு - 3 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
5. கடலைப்பருப்பு - 2 கப்
6. மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
7. ஓமம் - 1 தேக்கரண்டி
8. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
9.எள் - 1/2 தேக்கரண்டி
10. பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
11. உப்பு - தேவையான அளவு
12. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. சோயா பீன்ஸை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
2. கடலைப் பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
3. உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை அகற்றி மசித்துக் கொள்ளவும்.
4. பின்னர் மிக்ஸியில் கழுவிய கடலைப்பருப்பை போட்டு, அத்துடன் ஓமம், மிளகாய்தூள், உப்பு, எள்ளு, பேக்கிங் சோடா, மல்லித் தூள் சேர்த்து நன்றாக ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
5. அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் சோயா பீன்ஸ், நறுக்கிய வெங்காயம், மிளகாய் மற்றும் மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
6. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கலந்து வைத்திருக்கும் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.