பேரீச்சம்பழ லட்டு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பேரீச்சம்பழம் - 2 கப்
2. தேங்காய் (துருவியது) - 1 கப்
3. முந்திரிப்பருப்பு - 50 கிராம்
4. பொட்டுக்கடலை - 100 கிராம்
5. பாதாம்பருப்பு - 50 கிராம்
6. நெய் - 1/2 கப்
7. ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. தேங்காய்த் துருவலை உலர வைக்கவும்.
2. தேங்காய்த் துருவலுடன் மேலே கூறிய பொருட்களைச் சேர்த்து உரலில் ஒன்றிரண்டாக இடிக்கவும்.
3. பின்பு அதை எடுத்து தேவையான அளவில் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.