ரவை பர்பி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ரவை - 200 கிராம்
2. சர்க்கரை - 800 கிராம்
3. பால் - 1 லிட்டர்
4. நெய் - 50 கிராம்
5. ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1 தேக்கரண்டி நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ரவையைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ந்ததும், வறுத்த ரவையைப் போட்டுக் கிளறவும்.
3. பின், சர்க்கரை சேர்த்து விடாமல் கிளறவும்.
4. ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்துக் கிளறி, மைசூர் பாகு பதத்திற்கு வந்தவுடன் கிளறி இறக்கவும்.
5. ஒரு தட்டில் நெய் தடவி அதில் இறக்கிய இனிப்பைக் கொட்டிப் பரப்பவும்.
6. இனிப்பு ஆறியதும் துண்டுகளாக வெட்டிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.