கோதுமை - வாழைப்பழ அப்பம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - 1 கப்
2. வெல்லம் (பொடித்தது) - 1/2 கப்
3. அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
4. வாழைப்பழம் (கனிந்தது) - 1 எண்ணம்
5. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
6. சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லப் பாகு தயார் செய்து கொள்ளவும்.
2. பின்பு, அதனை வடிகட்டிக் கொள்ளவும்.
3. வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் வாழைப்பழத்தைச் சேர்த்து, அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு மற்றும் உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, சமையல் சோடா மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, ஓரளவு கெட்டியாகக் கலந்து கொள்ளவும்.
5. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றிப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.