ரவா தேங்காய் உருண்டை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. தேங்காய் துருவல் - 1 கப்
2. ரவை - 1/2 கப்
3. சர்க்கரை - 3/4 கப்
4. ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
5. நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. ஒரு மேசைக்கரண்டி நெய்யில் ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
2. மீதி இருக்கும் நெய்யில் தேங்காய்த் துருவலை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
3. சர்க்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்து, ‘பிசுக்கு பதம்’ வந்ததும் இறக்கவும்.
4. வறுத்த ரவை மற்றும் தேங்காய்த் துருவலை பாகில் கொட்டி, ஏலக்காய்தூள் சேர்த்துக் கிளறி, இறக்கி சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
குறிப்பு:
சர்க்கரை கரைந்து கொதித்ததும், ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் பாகைத் தொட்டுத் தேய்த்துப் பார்த்தால், கம்பி பிரிந்து வராமல், பிசுபிசுப்பாய் விரல்களில் ஒட்டும். அதுதான் ‘பிசுக்கு’ பதம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.