கேழ்வரகு அல்வா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கேழ்வரகு மாவு - 1 கோப்பை
2. தேங்காய்ப் பால் (கெட்டியாக) -1 கோப்பை
3.வெல்லம் -1 1/2 கோப்பை
4. நெய் - 2 மேசைக்கரண்டி
5. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
செய்முறை:
1. கேழ்வரகு மாவை இரண்டு கோப்பை தண்ணீரில் ஊற்றி, ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து, அதனை அரைத்து, மெல்லிய துணியால் வடிகட்டி பாலாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் 1 மேசைக்கரண்டி நெய் விட்டு, முந்திரிப் பருப்பைப் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
3. கெட்டியான தேங்காய்ப் பால் மற்றும் கேழ்வரகு மாவை ஒன்றாகக் கலந்து, அதே வாணலியில் சேர்த்துக் கட்டி தட்டாமல் கிளறவும்.
4. நெருப்பை மிதமானதாக வைத்து, கை விடாமல் கிளறவும்.
5. நல்ல கெட்டியாக வரும் சமயம் வெல்லத்தூள் சேர்த்துக் கிளறவும்.
6. இடையில் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
7. நன்கு அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி பருப்பைத் தூவிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.