முள் முறுக்கு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 200 கிராம்
2. பொட்டுக்கடலை மாவு - 200 கிராம்
3. அரிசி மாவு - 200 கிராம்
4. எள் - 2 தேக்கரண்டி
5. நெய் - 2 மேசைக்கரண்டி
6. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அதில் எள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் அனைத்து மாவுகளையும் சேர்த்துச் சிறிது தண்ணீர் கலந்து பிசையவும்.
2. முறுக்கு அச்சில் நட்சத்திர வடிவிலான அச்சு போட்டு, அதில் பிசைந்த மாவைப் போட்டு முறுக்கு போல் பிழிய வேண்டும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிழிந்த முறுக்கைப் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.