கேரட் அல்வா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கேரட் - 1 கிலோ
2. சர்க்கரை - 500 கிராம்
3. பால் - 200 மில்லி
4. நெய் - 100 கிராம்
5. முந்திரிப் பருப்பு - 20 கிராம்
செய்முறை:
1. கேரட்டை நன்றாகத் துருவி வைக்கவும்.
2. துருவிய கேரட்டை 100 மிலி பால் சேர்த்து நன்கு வேகவிடவும்.
3. கனமான பாத்திரத்தைச் சூடேற்றி அதில் நெய் ஊற்றவும்.
4. காய்ந்த நெய்யில் வேகவைத்த கேரட், சர்க்கரை, 100 மி.லி பால் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
5. இந்தக் கலவை அல்வா பதம் வரும்வரைக் கிளற வேண்டும்.
6. மேலாக முந்திரிப் பருப்புகளைத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.