குலோப்ஜாமூன்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சர்க்கரை - 2 கோப்பை
2. பால் பவுடர் - 1 கோப்பை
3. மைதா - 1 / 2 கோப்பை
4. சமையல் சோடா – 1 / 2 தேக்கரண்டி
5. உருக்கிய வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
6. எண்ணெய் – தேவையான அளவு
7. பால் – தேவையான அளவு
8. ஏலக்காய் - 2 எண்ணம்.
செய்முறை:
சர்க்கரைப்பாகு
1. ஒரு கோப்பை தண்ணீரில் சர்க்கரையைக் கலந்து அதனுடன் ஏலக்காயைத் தூள் செய்து சேர்க்கவும்.
2. சர்க்கரையைப் பாகு போல் வரும் வரை சூடு செய்து இறக்கவும்.
ஜாமுன்
1. ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, சமையல் சோடா, வெண்ணெய் போன்றவற்றைப் போட்டு நன்றாகக் கலக்கவும்.
2. இதில் தேவையான அளவு பால் ஊற்றிக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
3. பிசைந்த உருண்டையை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும்.
4. மாவு உருண்டையிலிருந்து நெல்லிக்காய் அளவில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிதமான நெருப்பில் உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
குலோப்ஜாமூன்
பொரித்தெடுத்த உருண்டைகளைச் சர்க்கரைப்பாகில் ஊற வைத்துப் பின்னர் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.