தேன்குழல் முறுக்கு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 4 கோப்பை
2. உளுந்தம் பருப்பு - 1 1/2 கோப்பை
3. உப்பு - தேவையான அளவு
4. எண்ணை - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் உளுந்தம் பருப்பைப் போட்டு சிறிது சூடு வரும் வரை இலேசாக வறுக்கவும்.
2. இலேசாக வறுத்த பச்சரிசி மற்றும் உளுந்தம் பருப்பைச் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
3. அரைத்து வைத்திருக்கும் மாவைச் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
4. முறுக்குப் பிழியும் கட்டையில் மாவைப் போட்டு முறுக்காகப் பிழிந்து வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பிழிந்து வைத்த முறுக்கைப் போட்டு வெந்தபின் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.