ரிப்பன் பக்கோடா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு – 2 கப்
2. அரிசி மாவு – 1 1/2 கப்
3. பெருங்காயத்தூள் – சிறிது
4. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
5. மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
6. ஓமம் – 2 மேசைக்கரண்டி
7. பூண்டு – 10 பற்கள்
8. எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
9. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1.வாணலியில் ஓமம் போட்டு வறுத்து ஆற வைத்துப் பொடித்துச் சலித்துக் கொள்ளவும்.
2. பூண்டை உரித்துச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
3. கடலை மாவு, அரிசிமாவு, பொடித்து வைத்த ஓமம், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு, பூண்டு அரைத்த விழுது, சூடான எண்ணெய் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் பிசைந்த மாவை அதற்குரிய அச்சில் வைத்துப் பிழியவும்.
5. பிழிந்த மாவு வெந்ததும் எடுக்கவும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.