உருளைக்கிழங்கு போளி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 10 எண்ணம்
2. உளுத்தம்பருப்பு - 1தேக்கரண்டி
3. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
4. முந்திரி பருப்பு - 10 எண்ணம்
5. மைதா மாவு - 2 கப்
6. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
7. கடுகு - 1 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. நல்லெண்ணெய் - தேவையான அளவு
10. மஞ்சள் தூள் - சிறிது
11. மல்லித்தழை - சிறிது
12. கருவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்துப் பொடி செய்து வைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லித்தழை, போட்டு வதக்கவும்.
3. அதனுடன் வேகவைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் கலந்து பூரணமாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
4. மைதா மாவில் உப்புடன் சிறிது எண்ணெய், தண்ணீர் சேர்த்து போளிக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
5. ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து அதனை தட்டி நடுவில் பூரணத்தை வைக்கவும்.
6. பிறகு சாதாரண போளி செய்வது போல் தோசைக்கல்லில் போளியைப் போட்டு எண்ணெய் (விரும்பினால் நெய் பயன்படுத்திக் கொள்ளலாம்) ஊற்றி இரண்டு பக்கங்களையும் வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.