முள்ளு முறுக்கு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 3 கப்
2. கடலைப் பருப்பு - 1 கப்
3. பாசிப்பருப்பு - 1/4 கப்
4. எள் - 1/2 தேக்கரண்டி
5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
6. பெருங்காயம் (கட்டி) - சிறிது
7. வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. சுத்தம் செய்து கழுவிக் காய வைத்த பச்சரிசி, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு மூன்றையும் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
2. இந்த மாவில் உப்பு, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்துக் கலக்கவும்.
3. பிறகு வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும்.
4. முள் முறுக்கு அச்சில் தேவையான மாவைப் போட்டு முறுக்காகப் பிழிந்து வைக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பிழிந்து வைத்த முறுக்குகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.