முறுக்கு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 2 கப்
2. அரிசி மாவு - 2 கப்
3. சமையல் சோடா - 1/2 தேக்கரண்டி
4. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
5. வெள்ளை எள் - 1/2 தேக்கரண்டி
6. நெய் - 1/4 கப்
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் உப்பு, நெய், சமையல் சோடாவை நன்றாகக் குழைக்கவும்.
2. இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து வெள்ளை எள் மற்றும் பெருங்காயத் தூளையும் சேர்த்துத் தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும்.
3. இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பிழிந்து வைத்திருக்கும் முறுக்கைப் போட்டுப் பொன்னிறமாகப் பொறித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.