அதிரசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி மாவு - 2 கப்
2. வெல்லம் - 2 கப்
3. ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
4. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. வெல்லத்தைப் பொடித்து ஒரு கப் தண்ணீரில் கரைத்து கல், மண் போக வடிகட்டி, ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி முற்றிய கம்பிப் பதத்திற்குப் பாகாய்க் காய்ச்சவும்.
2. அந்தப் பாகில் அரிசி மாவைச் சிறிது சிறிதாகக் கொட்டி கை விடாமல் கிளறவும். கடைசியாக ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.
3. மாவைச் சுத்தமான வெள்ளைத் துணி போட்டு வாயை மூடி கட்டி தட்டாமல் வைக்கவும்.
4. மறுநாள் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் எண்ணெய் தடவி வட்டமாகத் தட்டவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தட்டி வைத்தவற்றைப் போட்டு நன்கு சிவந்தவுடன் எடுத்து எண்ணெய் வடித்து வைக்கவும்.
குறிப்பு: ஒரு தட்டில் தண்ணீர் விட்டு 1/4 தேக்கரண்டி பாகை விட்டால் கரையாமல் இருக்க வேண்டும். இதுதான் அதிரசத்திற்குச் சரியான பதம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.