ரவா லட்டு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ரவை – 1 கப்
2. சர்க்கரை – 1 கப்
3. தேங்காய்த்துருவல் – 1 கப்
4. ஏலக்காய் – 7 எண்ணம்
5. நெய் – 3 மேசைக்கரண்டி
6. முந்திரிப்பருப்பு – 10 எண்ணம்.
செய்முறை:
1. ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய்விட்டுச் சூடாக்கவும், இதில் ரவையைச் சேர்த்து மிதமான வெப்பத்தில் லேசாக வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
2. வாணலியில் நெய், எண்ணெய் எதுவும் விடாமல் தேங்காய்த் துருவலை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
3. சர்க்கரையையும், ஏலக்காயையும் பொடியாக திரித்துக் கொள்ளவும்.
4. வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் விட்டுக் காய்ந்ததும், அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
5. மீதமுள்ள ஒரு மேசைக்கரண்டி நெய்யை வாணலியில் விட்டுக் காய்ந்ததும், அதனுடன் பொடி செய்த சர்க்கரை, ஏலக்காய் சேர்க்கவும்.
6. சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
7. தண்ணீர் கொதித்து பாகுபோல் திரண்டு வரும் போது ரவையும், தேங்காய்த் துருவலும் சேர்த்துக் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.
8. ரவை, சர்க்கரை, தேங்காய் எல்லாம் ஒன்றாகக் கலந்து உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்ததும் வறுத்த முந்திரிப் பருப்பைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.
9. இலேசான சூட்டுடன் இருக்கும் போதே ரவா லட்டு உருண்டையாகப் பிடிக்க வேண்டும்.
10. பிடித்து வைத்த உருண்டைகளை நெகிழித்தாளில் (பிளாஸ்டிக் பேப்பரில்) வைத்து உலர வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.