மைசூர் பாகு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு – 1 கப்
2. சர்க்கரை – 2 1/2 கப்
3. நெய் – 2 கப்.
செய்முறை:
1. கடலை மாவை இலேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
2. நெய்யை அடுப்பில் வைத்து சுட வைத்துக் கொள்ள வேண்டும்.
3. சர்க்கரையைத் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்ச வேண்டும்.
4. கம்பிப் பாகு வந்ததும் பாகில் சிறிது சிறிதாக மாவு சேர்த்துக் கிளற வேண்டும்.
5. நெருப்பை மிதமான சூட்டில் வைத்து, நெய் சேர்த்துக் கிளற வேண்டும்.
6. நெய்யும், மாவும் மாறி மாறி சேர்த்துக் கிளற வேண்டும்.
7. பொங்கி பூத்து வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்த வேண்டும்.
8. ஆறிய பிறகு துண்டுகளாகப் போட்டுக் கொள்ள வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.