ரவா பக்கோடா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ரவை - 1 கப்
2. கடலை மாவு - 2 கப்
3. சிறிய வெங்காயம் (நறுக்கியது) - 1/4 கப்
4. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
5. முந்திரிப் பருப்பு - சிறிதளவு
6. நெய் - 1 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. ரவையில் தண்ணீர் சேர்த்துச் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
2. ஊறவைத்த ரவையை வடிகட்டு எடுத்து அதனுடன், கடலை மாவு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு, முந்திரிப் பருப்பு, நெய் ஆகியவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து வைக்கவும்.
3. பிசைந்த மாவினைப் பக்கோடாக்களாக எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: மிளகாய்க்குப் பதில் மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.