ப்ரூட் அல்வா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பப்பாளி, வாழை, ஆப்பிள், சப்போட்டா, மாம்பழம் உள்ளிட்ட பழங்கள் - தேவையான அளவு
2. வெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
3. சர்க்கரை – 2 கப்
4. பால் பவுடர் - 1/4 கப்
5. குளுக்கோஸ் பவுடர் – 3 தேக்கரண்டி
6. ஃப்ரூட் எசன்ஸ் – 1/2 தேக்கரண்டி
7. பாதம் பருப்பு - 5 எண்ணம்
8. முந்திரிப் பருப்பு – 8 எண்ணம்
9. ஆரஞ்சு கலர் – 1/2 தேக்கரண்டி.
செய்முறை:
1. பழங்களை அரைத்துக் கூழாக மாற்றி அதிலிருந்து 2 கப் எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு அடி கனமான பத்திரத்தில் பழக்கூழ், சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
3. பழக்கலவை சிறிது கெட்டியாக வந்ததும் குளூக்கோஸ் பவுடர், பால் பவுடர், பாதம், முந்திரிப் பருப்புகள், வெண்ணெய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும்.
4. நன்றாகக் கெட்டியானதும் ப்ரூட் எசன்ஸ், கலர் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
5. ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.