மொச்சைக் கொட்டைப் போளி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மொச்சைக் கொட்டை - 200 கிராம்
2. வெல்லம் - 150 கிராம்
3. மைதா மாவு - 250 கிராம்
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. ஏலக்காய் - 3 எண்ணம்
6. உப்பு - சிறிது
7. எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
8. நெய் - 4 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. முதலில் மைதா மாவு, உப்பு, மஞ்சள் தூள், எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஏலக்காயைத் தூளாகப் பொடித்து வைக்கவும்.
3. மொச்சைக் கொட்டையை குக்கரில் நன்கு வேக வைத்து, மசித்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. வெல்லம் கரைந்ததும் நன்கு வடி கட்டிக் கொள்ளவும். பின்பு அதே பாத்திரத்தில் வடிகட்டிய வெல்லத் தண்ணீரை விட்டு, நன்கு கெட்டிப் பாகு வரும் வரைக் காய்ச்சிக் கொள்ளவும்.
6. அதில் மசித்த மொச்சை, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கிளறிப் பூரணமாகக் கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
7. மைதா மாவில் சிறிய சப்பாத்தி போல் தேய்த்து, அதில் கொஞ்சம் பூரணம் வைத்து மூடிக் கொள்ளவும்.
8. பின்பு அதை மைதா மாவில் தொட்டுக் கொண்டு பெரிய சப்பாத்தி போல் செய்து கொள்ளவும்.
9. அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கிச் சப்பாத்தியை போட்டு இரு பக்கமூம் நெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.