மைசூர் பாகு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 1கப்
2. சீனி - 2 கப்
3. நெய் - 3 கப்
4. சமையல் சோடா -1 சிட்டிகை
5. தண்ணீர் - 1 கப்
6. பால் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. கடலைமாவை நன்றாகச் சலித்து, சிறிது நெய்விட்டு வாசம்வரும் வருவரை வறுத்துப் பின் தனியாக ஆற விடவும்.
2. ஒரு அடுப்பில், ஒரு வாணலியில் நெய்யைச் சிறு நெருப்பில் காய வைத்து வைக்கவும்.
3. மறு அடுப்பில், ஒரு அடி கனமான பாத்திரத்தில் சீனி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
4. சீனி கொதி வந்தயுட்ன் பாலை ஊற்றவும். அப்போது சீனியில் உள்ள கசடுகள் மேலாக வரும், அதைத் தனியாகக் கரண்டியால் நீக்கவும். இப்படியே சீனியைக் கம்பிப் பதம் வரும் வரைக் காய்ச்சவும்.
5. சீனிக் கம்பிப் பதம் வந்தவுடன் அதில் சிறிது, சிறிதாகக் கடலை மாவைச் சேர்த்துக் கட்டிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
6. இப்படி மாவு சேர்க்கும் போது நெய்யையும் சிறிது, சிறிதாக ஒரு கரண்டியால் சுற்றிச் சேர்க்கவும்.
7. கட்டிப்பட்டு விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் நெய் பொங்கி வரும் அதுதான் சரியான பதம், சிறிது சமையல் சோடா சேர்த்துக் கிளறி விடவும்.
8. நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது நேரத்தில் வெட்டவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.