ஏலக்காய் காபி
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. காபித்தூள் - 1 தேக்கரண்டி
2. சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
3. பால் - 1 1/2 கப்
4. ஏலக்காய் - 4 எண்ணம்
செய்முறை:
1. ஒரு சிறு கிண்ணத்தில் காபித்தூளையும் சர்க்கரையையும் போடவும்.
2. அதில் 1/4 தேக்கரண்டிக்கும் குறைவான நீரைச் சேர்த்து, ஒரு கரண்டியால் விழுது போன்று ஆகும் வரை நுரை பொங்க அடிக்கவும்.
3. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலையும் தண்ணீரையும் சேர்க்கவும்.
4. அதில், ஏலக்காயை விதை நீக்கிப் போட்டு, நன்கு கொதிக்கவிடவும். ஏலக்காய் வாசனை போகாமல் இருக்க, அடுப்பைக் குறைவான நெருப்பில் வைத்திருக்கவும்.
5. இரண்டு கப்களில் காபி மற்றும் சர்க்கரைக் கலவையைச் சமமாக ஊற்றவும்.
6. அவற்றில், பால், ஏலக்காய் கலவையைச் சேர்த்து, மேலே சிறிது காபி பொடி தூவிப் பருகவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.