இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


13. பிளவு உதடுகள் மற்றும் பிளவு அண்ணம் - தொல்லைகள்

கடந்த பகுதியில் பிளவு உதடு மற்றும் பிளவு அண்ணம் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்பகுதியிலும் பார்க்கலாம்.

பிளவு உதடுகள் மற்றும் பிளவு அண்ணம் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்வதற்கு முன், செய்த பின் சில சமயங்களில் உணவுக் குழாய்களுக்கும் சுவாசக் குழாய்க்கும் இடையே முழுமையான மூடல் இருக்காது. இதனால் அந்நபர் பேசும் போது வாய்வழி காற்று வராமல் மூக்கு வழியேக் காற்று வரும். இதனால் மூக்கால் பேசுவது போல கொணகொணவென சத்தம் வரும். இதனை ஆங்கிலத்தில் Velopharyngeal Insufficiency என்பர். இந்தப் பிரச்சனையைக் குணப்படுத்த குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். பின்பகுதி தொண்டைச் சுவரை மூடும் மெது அண்ணத்தின் தோல்வி VPI எனப்படுகிறது.


இப்பிரச்சனை உள்ளவரிடம் சில தமிழ் வாக்கியங்களைக் கொடுத்துப் பேசச் சொல்லுவர்.

* பாப்பா பாட்டு பாடு

* மாமன் மகள் மீனா

* நான் நேற்று நடந்தேன்

* காமினி பாக்கு கொடு

* டினா டம்ளரை போட்டாள்

* சாமி காசு சேர்த்தான்

* வாணி தவளை வரைந்தாள்

* யார் வளையல் வாங்கியது

* ரங்கன் ரயிலில் ஏறினான்.

வாக்கிய உச்சரிப்பில் ‘எஃப்’ மற்றும் ‘வி’ ஒலிகள் எப்படி வருகின்றன என ஆராய்வர்.

பிளவு அண்ணம் பேச்சில் பாதிப்பை ஏற்படுத்துவது போலவே செவித்திறன் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

பற்களுக்கான குறள்கள்
* உண்டால் கழுவிடுக திருவாயை சீராக
கண்டபடி உண்ணாதே கேடு.

* மருத்துவன் மாண்புறு மானுடன் எண்ணி
மருந்தும் விருந்தாய் மகிழ்.
- தஞ்சாவூர் ஹரணி


உதடு மற்றும் பிளவு அண்ணத்தினால் சில பாதகமான விளைவுகள் ஏற்படும்.

1. சுவாசப் பிரச்சனைகள்

2. சாப்பிடுவதில் சிரமம், இது ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

3. நாக்கை அழுத்துதல் (உணவு உண்ணும் போது, ஒருவர் நாக்கை முன்னோக்கி தள்ளும் போது)

4. நாசி, பேச்சு அல்லது சில ஒலிகளை சொல்வதில் துன்பங்கள்.

5. அரிக்கும் தோலழற்சி மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் பிரச்சினைகள்.

6. நடத்தை, உணர்ச்சி அல்லது சமூகப் பிரச்சனைகள்.

7. காது நோய்த்தொற்றுகள், கேட்கும் சிரமங்கள் அல்லது மொத்தக் காது கேளாமை.

8. சரியாக வராத பற்கள் (நெரிசலான பற்கள்)

9. நாள்பட்ட நுரையீரல் நோய் அல்லது சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் (CF) போன்ற பிற்கால வாழ்க்கையில் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சனைகள்

இவற்றுள் குறிப்பாக, பிளவு அண்ணம் இருக்கும் குழந்தைகளுக்கு நடுக் காதில் நோய்த் தொற்று ஏற்படும். Otitis Media என ஆங்கிலத்திலும், இடைச் செவியழற்சி எனth தமிழிலும் இந்த நோய்த் தொற்றை அழைப்பர். காதுகளில் தசைகளும், எலும்புகளும் முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருப்பதால் இந்த மருத்துவp பிரச்சினை உருவாகும். தொடரும் இப்பிரச்சனையால் காது கேளாமை வந்துவிடும். தாய்ப்பால் இப்பிரச்சனையைக் குணப்படுத்தும் மாமருந்து.

பிளவு உதடு, பிளவு அண்ண குழந்தைகளுக்குப் பால் புகட்டப் பல வழிகள் உள்ளன.

* தாய்ப்பால்

* புட்டிப்பால்

* கரண்டி வழியாக பால் புகட்டல்

* ஊசி மருந்து செலுத்துவது போன்று பால் புகட்டல்


பிளவு உதடுக் குழந்தைகளுக்கு எவ்வழியில் பால் புகட்டலும் கடினமானதே. பால் வீணாய் வழிந்தோடும். தாய்ப்பால் ஓரளவுக்குக் குழந்தைக்கான எடையை அதிகரிக்கும்.

பிளவு உதடுக் குழந்தைகள் தாய்ப்பாலை உறிஞ்சும் போது இருமல், மூச்சுத் திணறல், எதுக்கலிப்பு, மூக்கடைப்பு உள்ளிட்ட துன்பங்கள் உருவாகும்.

பிளவு உதடுகள், பிளவு அண்ணத்துடன் இருக்கும் குழந்தைகளைத் தனித்தனியாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

பிளவு உதட்டின் அளவென்ன? பிளவு உதடு மற்றும் அண்ணத்தின் வாயமைப்பு என்ன? என்பது போன்ற பிளவு உதடுக் குழந்தைகளுக்கு அந்தத் தாய் ஏற்கனவேப் பால் கொடுத்த அனுபவம் பெற்றிருக்கிறாரா? பிளவு உதடுக் குழந்தைகளை எம்முறையில் வைத்துப் பால் கொடுத்தால், பிளவு உதடுக் குழந்தையால் முழுமையாகத் தாய்பால் அருந்த முடியும் என்பதனைக் கணிக்க வேண்டும்.


பிளவு உதடுக் குழந்தைகளுக்குப் புட்டிப் பால் கொடுப்பதில் சில மாற்று வழிகள் உள்ளன.

* கண்ணாடி பாட்டில் அல்லது அமுக்க முடியாத பிளாஸ்டிக் பாட்டில்களில் பால் புகட்டுவதற்கு பதில் பாட்டிலை ஸ்பாஞ்ச் போல் அமுக்கிப் பாலைப் புகட்டும் விதமாய்ப் பால் பாட்டில் ஏற்பாடு செய்யலாம்.

* ஊசி இல்லாத சிரின்ஜ் வைத்து முழு அளவு பாலை பிளவு உதடு பிளவு அண்ணக் குழந்தைகளுக்கு திருப்தியாகப் புகட்டலாம்.

* பிளவு உதடு பிளவு அண்ணம் உள்ளவர்களைப் பல்துறை பிளவு குழு வைத்து பிளவுப் பிரச்சனையைத் திறன்பட மேலாண்மை செய்யலாம்.

* குழுவிலுள்ள தனி நபர்கள் ஒரு இடைநிலை வழியில் செயல்பட்டு பிளவு உதடு, பிளவு அண்ணக் குழந்தைகளுக்கு சிறப்பாக உதவ முடியும்.

* பிளவு உதடு பிளவு அண்ணக் குழந்தைக்கான சிகிச்சை விளைவுகளை அளவிடுவது தேவையான ஒன்று.

உடல்நல விளைவு அளவீட்டுக்கான சர்வதேச கூட்டமைப்பு (ICHOM) பிளவு உதடு மற்றும் பிளவு அண்ணத்திற்கான விளைவு அளவீடுகளின் நிலையான புள்ளி விவரங்களை முன்மொழிந்துள்ளது. கேட்பது, சுவாசிப்பது, உண்ணுவது, குடித்தல், பேச்சு, வாய்வழி ஆரோக்கியம், தோற்றம் மற்றும் உளவியல், சமூக நலன் போன்றவை பிளவு உதடு சிகிச்சைக்கு பின் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றன? என்பதனை பலவகை தரவுகள் மூலம் அந்த கூட்டமைப்பு ஆராய்கிறது.

பிளவு உதடு மற்றும் பிளவு அண்ணம் கீழ்க்கண்ட நாடுகளில் கீழ்க்கண்ட விகிதத்தில் காணப்படுகிறது.

* பூர்வீக அமெரிக்கர்கள் - 3.74/1000

* ஜப்பானியர்கள் - 0.82/1000 முதல் 3.36/1000 வரை

* சீனர்கள் - 1. 45/1000 முதல் 4. 04/1000 வரை

* வெள்ளை அமெரிக்கர்கள் - 1. 43/ 1000 முதல் 1. 86/ 1000 வரை

* லத்தீன் அமெரிக்கர்கள் - 1.04/1000

* ஆப்பிரிக்கர்கள் - 0.18/1000 முதல் 1.67/1000 வரை

சில நாடுகளில் கருவில் இருக்கும் குழந்தைக்கு பிளவு உதடு, பிளவு அண்ணம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அக்கருவைக் கலைக்கச் சட்டப்பூர்வ அனுமதி தரப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்குத் தனியாக பற்பசை இருக்கிறதா?

முத்து ஆனந்த். மலுமிச்சைப்பட்டி.

மனிதனை மனிதன் கடிக்கும் போது, அது விசமாகிவிடும் என்கின்றார்களே, உண்மையா? அதற்கு என்ன சிகிச்சை பெற வேண்டும்?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

மனிதர்கள் கடிப்பதில் பெரிய அளவிலான விசத்தன்மை எதுவுமில்லை, இருப்பினும் சில கடிகள் அபாயமானது. கடிபட்டதில் மேற்தோல் கிழித்திருந்தால் எலும்புகளில் தசை நாண்களில் மூட்டு இணைப்புகளில் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். கடிக் காயத்தை சோப்பு நீரால் அல்லது சலைன் மற்றும் பொவிடோன் அயோடின் வைத்துச் சுத்தம் செய்ய வேண்டும். இரத்தத்தை உலர்ந்த பருத்தித் துணியால் ஒற்றி எடுத்துத் தொடர்ந்து வராமல் நிறுத்த வேண்டும். ஒரு செமீ வரை ஆழமான அனைத்துக் கடிக் காயத்துக்கும் டிடி எனும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரையின் பேரில் நோய் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். காயத்துக்கு வலி மருந்துகளைப் பயன்படுத்தலாம். வலி அதிகம் இருந்தால் மருத்துவர் வலி நிவாரணிகளையும் பரிந்துரைப்பார். கடிக் காயம் கழுத்திலோ முகத்திலோ தலையிலோ இருந்தால் மருத்துவரின் மேல் ஆலோசனை பெறுவது நல்லது. சில கடிக்காயங்களுக்குத் தையல்களோ அறுவை சிகிச்சையோக் கூடத் தேவைப்படலாம். மொத்தத்தில் கடிபடாத அளவுக்கு யாருடனும் சண்டை போடாமால் தவிர்க்கலாம்.



வெளிநாட்டு இலக்கியங்களில் பிளவு உதடு பிளவு அண்ணம் உள்ளோர் எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளனர்.

இயன் பிளமிங்கின் ஜேம்ஸ்பான்ட் நாவலான கோல்ட் பிங்கரின் இரண்டாவ்து வில்லன் ஒட்ஜோப் ஒரு பிளவு உதடு ஆசாமி. ரெட் டிராகன் மற்றும் ஹன்னிபால் விடியோ விளையாட்டுகளில் பிளவு உதடு மனிதர்கள் கொடியவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

பிளவு பட்ட உதடுகள் மற்றும் அண்ணங்கள் பாதிப்பு அரிதாக கால்நடைகள் மற்றும் நாய்கள், ஆடுகள், செம்மறியாடுகள், பூனைகள், குதிரைகள், பாண்டாக்ககளிலும் காணப்படுகின்றன. கால்நடைகளில் பிளவுஉதடுகள் கீல்வாதத்துடன் இணைந்து காணப்படுகின்றன.

மூச்சுத் திணறல் நிமோனியா, மீளுருவாக்கம் மற்றும் ஊட்டசத்து குறைபாடு போன்றவை பிளவு உதடு பிரச்சனையுடன் ஒட்டிப் பிறந்தவை. பிளவு அண்ணத்துக்கு மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சைகள் செய்வதால் அதிக அளவில் அறுவை சிகிச்சைத் தோல்விகள் ஏற்படுகின்றன. மொத்தத்தில் பிளவு உதடு மற்றும் பிளவு அண்ண பிரச்சனை பல் மருத்துவருடன் நேர்மறையாய் எதிர்மறையாய் தொடர்புடைய மருத்துவ பிரச்சனையாகும்.

பிளவு உதடுகள் பிளவு அண்ணத்தை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யும் மருத்துவர்கள் வாய் தாடை முக அறுவையியல் நிபுணர்கள் (Oral and Mazillofacial Sugeon)என்கிற வகைமையில் அடங்குவர்.

பிளவு உதடுக் குழந்தைகளைச் சரி பண்ணி இவ்வுலகில் தன்னம்பிக்கை உள்ளவர்களாக வெற்றியாளர்களாக அழகிய தோற்றம் உள்ளவர்களாக மற்றும் வல்லமை கொண்டவர்கள் வாய் தாடை முக அறுவையியல் வல்லுநர்கள் எனலாம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/medicine/dental/serial/serial1/p13.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License